tamilnadu-arasu-logo
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
Rural Development & Panchayat Raj Department
tamilnadu-arasu-logo
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
Tamilnadu Corporation for Development of Women
முக்கிய செய்திகள்
அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்

இத்திட்டம் உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் பணியிடங்கள், வங்கி, மற்றும் சமுதாய அமைப்புப் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

மகளிரால் எளிதில் பயன்படுத்தும் வகையில் இவ்வாகனங்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் படி கியர் இல்லாத அல்லது ஆட்டோ கியர் உடைய இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் வாங்க முடியும். மாற்றுத் திறனாளிகளின் உபயோகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம்

இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஒரு இலட்சம் உழைக்கும் மகளிர் பயன் பெறுவர். இத்திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதிகபட்ச மானியமாக வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.